ஆளுநர் தேநீர் விருந்து - விஜய் புறக்கணிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் விஜய்யின் த.வெ.க ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விஜய்யின் த.வெ.க அறிவித்துள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிப்பதாக விளக்கம் அளித்துள்ளது. ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தவெகவும் விருந்தை புறக்கணித்துள்ளது. ஏற்கனவே குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.


