பள்ளிகளில் "மாணவர் மனசு" புகார் பெட்டி... பாலியல் குற்றங்களை தடுக்க அரசு அதிரடி!

 
பள்ளிகளில் புகார் பெட்டி

தமிழ்நாட்டில் பள்ளிகளில் நிகழும் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆரம்பித்து கோயம்புத்தூர் சின்மயா வித்யாலயா பள்ளி வரை ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் நீண்ட வண்ணமே இருக்கிறது. இதில் உச்சக்கட்டமாக கோவை மாணவி கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஒருசில அரசுப் பள்ளிகளிலும் பாலியல் புகார்கள் அவ்வப்போது எழுகின்றன.

புகார் பெட்டி

இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் பள்ளிக்கல்வித் துறைக்கு எழுந்துள்ளது. அதன்படி பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கும் நடைமுறை தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார். தற்போது அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து, வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "2021-22 கல்வியாண்டில் மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக 37,391 அரசுப் பள்ளிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 7.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யாரையும் சும்மா விடாதீங்க.. தற்கொலை செய்த மாணவியின் பரபரப்பு கடிதம்.. காதல்  திருமணம் செய்த ஆசிரியர் கைது.! |

அதில் பள்ளியின் வளாக சுகாதாரப் பணிகளுக்காக ரூ.1000 செலவிடப்பட்டது. மீதி தொகையை பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வைப்பதற்கு பயன்படுத்தி கொள்ள தற்போது அனுமதி தரப்படுகிறது. மேலும், அதற்கான வழிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி தற்போதைய சூழலில், மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். 

பாலியல் குற்றச்சாட்டில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்  குண்டர் சட்டத்தில் கைது - SEITHIGAL 24X7

இந்த குழுவின் சார்பில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய பயிற்சி பின்னர் வழங்கப்படும். பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ என்ற பெயரில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்பட வேண்டும். அந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை திறந்து அதிலிருக்கும் புகார்களுக்கு உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். இதுதொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.