அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மியூச்சுவல் டிரான்ஸ்பருக்கு விண்னப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

 
பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மனமொத்த மாறுதலுக்கு (Mutual transfer) விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

2025-26ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, தொடக்க, இடைநிலை, முதுகலை, தலைமை ஆசிரியர் என அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. 

ஆசிரியர்கள்

இதனை தொடர்ந்து, மனமொத்த மாறுதலுக்கு (Mutual Transfer) ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும், மனமொத்தமாறுதல் பெற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் அதனை பயன்படுத்த முடியாது என்ற விதிகளை பள்ளிக்கல்வித்துறை நினைவூட்டி உள்ளது..

அதன்படி, தொடக்கக் கல்வித் துறையில் ஒன்றியம் மற்றும் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மனமொத்த மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரும்(தொடக்கக் கல்வி), மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) பரிசீரித்து நடவடிக்கை எடுக்கு வேண்டுமெனவும், ஆசிரியர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.