"பாடி ஷேமிங் - மோசமான கேள்வி"... கௌரி கிஷன்

 
s s

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நடந்த நிகழ்விற்கு பலரிடம் இருந்து எனக்கு ஆதரவு வந்துள்ளது என நடிகை கௌரி கிஷன் தெரிவித்துள்ளார்.

கௌரி கிஷன்: "அதே நபரால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும்" - நடிகர் சங்கம் கண்டனம்

நேற்றைய அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூடியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன், உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை  செய்ததற்கு சமம் என பதில் அளித்தார். 

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நடிகை கெளரி கிஷன், “செய்தியாளர் சந்திப்பின்போது பாதியிலேயே வெளியேற நினைத்தேன். ஆனால் படத்திற்காக மௌனம் காத்தேன். என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஒரு நகைச்சுவையாக அதை கருதுமாறும் தெரிவித்தார்கள். பெண்கள் பாடி ஷேமிங் செய்யப்பட்டால் அதை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்க வேண்டும். பாடி ஷேமிங் சாதாரணமானது என்ற மனநிலை ஆபத்து. சமூகவலைதளங்களில் எனக்கு ஆதரவு இருப்பது நிம்மதியாக உள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நடந்த நிகழ்விற்கு பலரிடம் இருந்து எனக்கு ஆதரவு வந்துள்ளது” எனக் கூறினார்.