பட்டபகலில் வீதிக்கு வந்து கொந்தளித்த ஜி.பி.முத்து... காது கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தைகள்
திருச்செந்தூர் அருகே கோவிலுக்காக வீதியில் சண்டைபோட்ட ஜி.பி.முத்துவின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சமூக வலைதள பிரபலம் ஜி.பி.முத்து மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவிலாகும். இந்த கோவிலுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். தமிழ் மாதத்தில் முதல் நாள் இந்த கோவிலில் பூஜை நடைபெறும். அப்போது ஜி.பி.முத்துவும் சில மாதங்களில் பங்கேற்பார். அதே போல் இந்த கோவிலுக்கு பூஜை செய்து வரும் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்களும் பங்கேற்பார்கள்.
பட்டப்பகல் நடுத்தெருவுக்கு வந்த ஜி.பி.முத்து..காதே கூசும் அளவுக்கு கெட்டவார்த்தைகள்..| GP Muthu#gpmuthu #viralvideo #thanthitv pic.twitter.com/TC3gGBowJD
— Political News🔥 (@Mahi1987Mass) September 19, 2024
இந்த நிலையில் நேற்றைய தினம் புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் அந்த கோவிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்துள்ளனர்.அப்போது அங்கு வந்த ஜி.பி.முத்து மகேசை, “இந்த கோவிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது” என்று கூறியுள்ளார். அப்போது பூசாரி மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் ஜி.பி.முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீதிக்கு வந்த ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று பேசுகிறார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.