திடீர் தீ விபத்து : கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒத்திவைப்பு..!!

 
Chennai  Grand Masters Chess 2025 Chennai  Grand Masters Chess 2025


சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக,  குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி இன்று (ஆக.6) தொடங்க இருந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி இந்தப் போட்டி நடைபெற இருந்த நிலையில்,  அந்த விடுதியின் 9வது தளத்தில் நேற்று நள்ளிரவு திடீரென  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.  

chess olympiad america

இதனையடுத்து விடுதியில் இருந்த  அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு , அதே பகுதியில் உள்ள மற்றொரு நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.   அத்துடன் திடீர் தீ விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் நடைபெற இருந்த போட்டிகள் , நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  போட்டிக்கு இடையே ஆகஸ்ட் 11ம் தேதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.