வெளியானது அறிவிப்பு! குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 
tnpsc tnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கு இன்று (ஏப்.25) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இளைஞர்களுக்கு அரசு பணி என்பது நீண்ட நாள் கனவாக உள்ளது. அதன்படி தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு பணிக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 
அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கு இன்று (ஏப்.25) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 3,935 விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் - 4 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் - 4 தேர்வுக்கு 10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணபிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.