கிண்டி ரேஸ் கிளப்பில் நீர் நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர் நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை கிண்டியில் பிரபல ரேஸ் கிளப் இயங்கி வருகிறது. இங்குள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர் நிலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கிண்டி ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர் நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரி ஜிம்கானா கிளப் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர ஜிம்கானா கிளப்க்கு எந்த உரிமையும் இல்லை என தமிழ்நாடு அரசு வாதத்தை முன் வைத்தது. இதனையடுத்து கோல்ஃப் மைதானத்தில் நீர் நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குத்தகைக்கு விட்ட நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் முன்பு ஜிம்கானா கிளப்க்கு எந்த நோட்டீசும் அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.


