பெண்ணின் ஹேண்ட் பேக்கில் இருந்த துப்பாக்கி தோட்டா! விமான நிலையத்தில் பரபரப்பு
கோவை விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடமிருந்து 9mm துப்பாக்கி தோட்டா பறிமுதல், கோவை பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் இன்று காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடைமைகள் சோதிக்கப்பட்டது. அப்பொழுது அவர் கொண்டு வந்த பையில் 9mm வகை துப்பாக்கி தோட்டா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுடுத்து சரளா ராமகிருஷ்ணன் என்ற அந்த பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பீளமேடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்ளனர். விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்த பிரபல அறக்கட்டளையான ராமகிருஷ்ணா குழும அறக்கட்டளையின் அறங்காவலர் மனைவி என்பதும், பெங்களூருக்கு கிளம்பிய பொழுது துப்பாக்கி தோட்டா இருந்தததை கவனிக்காமல் எடுத்து வந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


