சென்னை ஆர்.பி.ஐ-யில் வெடித்த துப்பாக்கி.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பெண் காவலர்..!!
சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் எதிர்பாராமல் பெண் காவலரின் துப்பாக்கி வெடித்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுல்ளனர்.
சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் ஆயுதப்படை பெண் காவலர் தர்ஷினி, காவல் பணியில் இருந்துள்ளார். அப்போது ரிசர்வ் வங்கியில் நேற்று இரவு திடீரென எச்சரிக்கை அலாரம் அடித்துள்ளது. இதனையடுத்து தர்ஷினி தான் வைத்திருந்த துப்பாக்கியில் குண்டை லோடு செய்துள்ளார். தொடர்ந்து வங்கி வளாகத்தை சுற்றி பார்த்த போது, அங்கு சந்தேகப்படும் வகையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறார். பின்னர் காவலர் தர்ஷினி லோடு செய்த தோட்டாவை எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்துள்ளது.

சந்தேசத்திற்கு இடமாக எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றாலும், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு சுவற்றில் பட்டு விழுந்தது. இதனால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ஷவசமாக காவலர் தர்ஷினியும் உயிர் தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..


