கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 
கருக்கா வினோத்

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Image

கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிய வந்ததும், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் ரவுடி கருக்கா வினோத் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  கைது செய்யப்பட்ட வினோத்தை கிண்டி போலீசார் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். விசாரணையில் ரவுடி கருக்கா வினோத் ஏற்கனவே டாஸ்மாக் கடை, கமலாலயம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியதும், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாததால் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக வாக்குமூலம் அளித்தார்.  பின்னர் கருக்கா வினோத்தை வருகிற 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் தொடர்ச்சியாக கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு மற்றும் மற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.