குருபெயர்ச்சி கோலாகலம்- ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார்
ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் குரு பகவான் இன்று மதியம் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த குரு பெயர்ச்சி காரணமாக மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ,மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது .
இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு சூரியனார் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மூலவர் குரு பகவானுக்கு பால், தயிர், சந்தனம் ,மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. தனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் குரு பகவானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. குரு பெயர்ச்சி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தூத்துக்குடி பாகம்பரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேபோல் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் தஞ்சை திட்டை குரு பகவான் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருவொற்றியூரில் 500 ஆண்டு பழமையான தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி யாக பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாட்டனர். செங்கோட்டை அருகே உள்ள புளியரை தட்சிணாமூர்த்தி திருக்கோயிலிலும் குரு பெயர்ச்சி விழா கோலாலமாக நடந்தது.


