குட்கா முறைகேடு வழக்கு- விஜயபாஸ்கரிடம் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்

 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள்  அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல்  வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயபாஸ்கர்

தமிழகத்தில் தடையை மீறி  குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், உள்பட 27 பேருக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன் என்பவர் மரணமடைந்துவிட்டார். எனவே அவருக்கு எதிரான வழக்கை கைவிடபட்டு மீதாம் உள்ள 26 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறார். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு நிலுவையில் இருந்து  வருகிறது. 


இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் இறுதி அறிக்கையை  (கூடுதல் குற்றபத்திரிகை) காகித வடிவிலும் 492 ஆவணங்கள் கொண்வற்றை பென்-ரைவ் மூலமாக வழங்கபட்டது. அன்று விசாரணைக்கு ஆஜரான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், செந்தில்முருகன், நவநீதகிருஷ்ணன், சேஷாத்ரி, வி.ராமநாதன், ஜோசப் தாமஸ், செந்தில் வேலவன், குறிஞ்சி செல்வன், டாக்டர் லட்சுமி நாராயணன், வி.சம்பத், மனோகர், ஆர்.கே.ராஜேந்திரன் 14 பேர்க்கு  கூடுதல் குற்றபத்திரிகை நகல் வழங்கபட்டது. அன்றைய தேதியில் விசாரணைக்கு ஆஜராகாத மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அடுத்த விசாரணைக்குள் ஏதேனும் ஒரு நாளில் நேரில் ஆஜராகி குற்றபத்திரிகை நகல் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்திருந்தார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தார். இதனையடுத்து அவருக்கு கூடுதல் குற்றபத்திரிகை நகல் வழங்கபட்டது. பிரதான வழக்கு வரும் 10 தேதி விசாரணைக்கு வரவுள்ளது.