அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி - ஹெச்.ராஜா வரவேற்பு
அமெரிக்க அதிபராக டொனாட்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பது வரவேற்கதக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் இந்துக்களின் மிகப்பெரிய ரசிகன் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். நான் உங்கள் முன்னாள் நின்று ஒன்றை கூறுகிறேன். நான் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்துக்களும், இந்தியாவும் வெள்ளை மாளிகையின் நண்பர்களாக இருப்பார்கள் என உறுதி அளிக்கிறேன். தலைமுறைகள் கடந்து அமெரிக்காவில் வாழும் இந்துக்களாலும், இந்தியர்களாலும் அவர்களின் கடினமான உழைப்பாலும் அமெரிக்கா வலிமை பெற்றிருக்கிறது. இங்கு வாழும் இந்துக்களால் அமெரிக்காவில் கல்வி மற்றும் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றிருக்கிறன. அவர்களது உழைப்பால் அமெரிக்கா செழிப்படைந்திருக்கிறது. இந்தியா எப்போதும் அமெரிக்காவின் உயர்ந்த நட்பு நாடாக இருக்கும். வளர்ச்சி, பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான விஷயங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஏற்கனவே அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
நான் இந்துக்களின் மிகப்பெரிய ரசிகன் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். நான் உங்கள் முன்னாள் நின்று ஒன்றை கூறுகிறேன். நான் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்துக்களும், இந்தியாவும் வெள்ளை மாளிகையின் நண்பர்களாக இருப்பார்கள் என உறுதி அளிக்கிறேன்.… pic.twitter.com/wXr3Ln9a5Q
— H Raja (@HRajaBJP) November 7, 2024
மேலும் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக குரல் கொடுத்தவர் திரு.டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தான்... பாரதத்திலிருந்து நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான திரு.ராகுல்காந்தி அவர்களோ, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களோ, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அவர்களோ வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக வாய் திறக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு கனடாவில் இந்து கோவில் மீதும் இந்துக்கள் மீதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது முதலில் குரல் கொடுத்தவர் மட்டுமல்ல நான் அமெரிக்க குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் கனடாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என உறுதிபடக் கூறியவர் திரு.டொனால்ட் ட்ரம்ப் அவர்கள்...
பயங்கரவாதத்தால் உலக அளவில் நீண்ட காலம் பல்வேறு பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்தித்த நாடு பாரதம். திரு.நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் பாரதத்தில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதத்தை உலகளாவிய அளவில் முற்றிலும் ஒடுக்க விரும்பும் ஒரு தலைவர் பாரத பிரதமரின் நண்பராகவும், அமெரிக்காவில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவராகவும், உலக அளவில் இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவராகவும், பாரதத்துடன் நட்புறவை பேணுவதில் விருப்பமுள்ளவராக இருப்பதும் அவர் அமெரிக்க குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருப்பதும் வரவேற்கத்தக்க விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.