நெருங்கும் தேர்தல்... இஸ்லாமியர்களை கவர ரூ.39.20 கோடியில் பிரமாண்ட திட்டத்தை கையிலெடுத்த திமுக

 
ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம் ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம்

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இசுலாமியர்களுக்கு  உதவும் வகையில் சென்னை விமான நிலையம் அருகே  நங்கநல்லூரில் ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம் கட்ட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

Image

மெக்கா நகருக்கு புனித ஹச் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணத்திற்கு ஒருநாள் முன்பாக கட்டணமின்றி  தங்கிக் கொள்ளும் வகையில் ஹஜ் இல்லம் விமான நிலையம் அருகே அமைய உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 5 மாடிகள் 400 அறைகளுடன் அமைய உள்ள ஹஜ் இல்லத்தில் நாள்தோறும் 400 ஹச் பயணிகள் தங்க முடியும் என்றும் 18 மாதங்களில் கட்டுமான பணி நிறைவுற்று ஹஜ் இல்லம் பயன்பாட்டு வர திட்டமிட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர்கள் சா.மு. நாசர்  , தா. மோ . அன்பரசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது. முதலமைச்சருக்கு நன்றி. இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் மக்காவில் இருந்து தெரிவிக்கும் வாழ்த்து தெரிவிதுள்ளார். சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. அதனை  நனவாக்கும் வகையில் விமான நிலையம் அருகில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டுவது மிகுந்த மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது. லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் சார்பில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.