தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!
தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்று பிற்பகல் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மற்றொரு நாளில் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


