அருமை நண்பர் ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்து - கமல் ஹாசன்

 
tn

நடிகர் ரஜினிகாந்த்துக்கு கமல் ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  ஆங்காங்கே ரத்ததான முகாம்,  மருத்துவ முகாம் , அன்னதானம் என நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவர் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  அத்துடன் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி திரை பிரபலங்களும்,  அரசியல் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தின் மூலம் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.