இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! நேற்று தங்கம் விலை 280 ரூபாய் குறைப்பு... இன்று 120 ரூபாய்...!

 
1

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து, ரூ.6,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ரூ.49,480-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,079-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து, ரூ.5,066-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold rate

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 79,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து, ரூ.80,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.