ராசிபுரத்தில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி!

 
ச் ச்

ராசிபுரத்தில் முதல் முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் என கலந்து கொண்டு நடனம் ஆடினர்.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் மக்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது  ராசிபுரம் திமுக நகர செயலாளர் சங்கர் மற்றும் SSS ஆடியோ சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில்  ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள்,பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இசைக்கு ஏற்ப சாலையில் நடனமாடினர். அங்கங்கே கும்பலாக இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தூக்கிக் கொண்டு குத்தாட்டம் ஆடி  தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வருகின்றனர். தற்போது மாநகர பகுதிகளில் மட்டுமே ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக ராசிபுரத்தில் நிகழ்ச்சி கொண்டுவரப்பட்ட நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பொதுமக்கள்  கலந்துகொண்டு நடனமாடியும் கண்டு களித்து வருகின்றனர். மேலும் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.