வெள்ளம், மழை பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு பைசா தரவில்லை - சபாநாயகர் அப்பாவு

 
tn

தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் அவையிலேயே அமர்ந்திருக்கிறார் ஆளுநர் ரவி. சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.அப்போது உரையை வாசித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்.

tn

நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி நெருக்கடிக்கு இடையே சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்த ஒன்றிய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த சில ஆண்டுகளில் நமது மாநிலம் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது.

tn

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது.சவால்களுக்கு இடையேயும் மக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்திடும் திறன்மிகு நிர்வாகத்தை வழங்கிட இந்த அரசு உறுதியாக உள்ளது. சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் விளைவாக பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது 40% இருந்து 65% ஆக உயர்ந்து பெண்கள் எளிதாக பயனம் செய்யவும் முன்னேறவும் வழி பிறந்துள்ளது. ஆளுநரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொன்னீர்கள். இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND-ல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ₹50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும்.  சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம் என்றார்.