"தற்காலிக அரசு ஊழியர்கள் சம ஊதியம் கோர முடியாது" - ஹைகோர்ட் கருத்து!

 
நில ஆக்கிரமிப்பு வழக்கு… சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் தம்பிதுரை – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வித்துறை தூய்மை பணியாளர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்கக் கோரி, காவல் துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 558 தூய்மை பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்வித் துறையில் வழங்குவது போல காவல் துறை தூய்மை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.

உயர் நீதிமன்றம்

இம்மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில், "புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், பிற துறை பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் கோர முடியாது. இதில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை” என வாதிடப்பட்டது. காவல் துறை பணியாளர்கள் தரப்பில், "ஒரே பிரிவை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு, சமமான பணி, சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வழிவகை உள்ளது” என கூறப்பட்டது.

கரோனா காலம்: துயரத்தை மட்டுமே சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள் | Corona  period - hindutamil.in

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், "கல்வித் துறை தூய்மை பணியாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள். ஆனால் மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சம வேலைக்கு சம ஊதியம் என்பதை கோர முடியாது. அவர்களுக்கு தற்காலிக அடிப்படையிலேயே சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவர்களுக்கு பிற துறைகளுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது” என்று கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.