'என் புருஷனையாடா பிடிச்சிட்டு போறீங்க'... போதையில் அண்ணா நகரை அலறவிட்ட பெண்!

 
s s

சென்னை அண்ணாநாகரில் கணவரை கைது செய்ததால் சாலையில் இறங்கி ரகளையில் ஈடுப்பட்ட மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை டிபி சத்திரம் காவல் நிலையத்தில் தனது கணவரை கைது செய்து விட்டதாக கூறி அவரது மனைவி சத்தியா தனது குழந்தைகளோடு வந்து நேற்று இரவு சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போலீசார் சமாதானம் செய்த போதும் செல்லாமல் சந்தியா ரகளையில் ஈடுபட்டுள்ளார். டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவர் நபர் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்த நபரை மீண்டும் டி.பி சத்திரம் போலீசார் கைது செய்து விட்டதாகக்கூறி சாலையில் இறங்கி ரகளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அண்ணாநகர் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அந்த பெண் மதுபோதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சத்யாவின் கணவரான கணேஷ் என்பவர் உண்மையிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளாரா? எந்த காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர் என்பது குறித்தும், பெண் மது போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகளையில் ஈடுபட்ட பெண்ணை குமரன் நகர் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.