ட்ரெஸ்ஸை கழட்ட சொன்னார்...விஷால் பட நடிகை பகீர் பேட்டி..!
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலுடன சேர்ந்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் மூன்று ஹீரோயின்களுள் ஒருவராக நடித்திருக்கிறார். இவர், பல இந்தி படங்களில் முக்கிய வேடங்களில், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் 2018ஆம் ஆண்டு #Me Too பிரச்சாரம் மூலம் பலர் கவனத்தை ஈர்த்தார். பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பலர் இந்த பிரச்சாரம் மூலம் சில பிரபலங்களின் முகத்திரையை கிழித்தெரிந்தனர். அதே போல, இவரும் பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இவர், ஒரு இயக்குநருக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா.சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், ‘ஒரு இயக்குனர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறினார். ஒரு படப்பிடிப்பின் போது இயக்குனர் உங்கள் ஆடைகளை கழட்டிட்டு நடனம் ஆடுங்கள் என கூறினார். அப்போது நான் அமைதியாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர்கள் மிகவும் வேதனைப்பட்டனர். அவர் சொன்னது தவறு என நினைத்தார்கள். மீடூ பிரசாரத்தின் போது யாரும் பேச முன் வரவில்லை. எல்லோரும் என்னை ஆதரித்தனர். இதை தொடர்ந்து இயக்குனர் அமைதியானார். அந்த காட்சியில் என்னுடைய ஆடை கொஞ்சம் வெளிப்படையாக இருந்தது.


