தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
சென்னை தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டை கொத்தளத்தில் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் 78 வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைக்க உள்ளார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினவிழாவில் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். பின்னர், தகைசார் தமிழர் விருது, ஏபிஜே அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும்.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆக. 14,15 ஆகிய இரு நாட்கள் முதலமைச்சரின் இல்லம் முதல் தலைமைச் செயலகம் வரை செல்லும் வழித்தடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன், ஏர் பலூன் உள்ளிட்டவை பறக்கத் தடை விதிக்கப்படுகிறது - காவல்துறை