தமிழகத்தில் 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி - எச்சரிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்!!

 
minister subramaniam

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.  இந்த சூழலில் இந்தியா முழுவதிலும் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று தமிழகத்திலும் வேகமாக பரவி வரை தொடங்கியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 34 பேர்  ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபர்களை விமான நிலையத்தில் தீவிரமாக பரிசோதிக்கும் நடவடிக்கைள் தற்போது மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

corona update

இந்த சூழலில் மக்கள் பண்டிகை காலங்களில் கூட்டமாக கூடுவதால் கொரோனா,  ஒமிக்ரான்  பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். கடைகள் ,வணிக வளாகங்கள், திரையரங்குகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார், அத்துடன் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் ,தவறாமல் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

corona

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருவோர் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்துதல் அவசியமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது. ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.  புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடவேண்டும்.  நட்சத்திர  விடுதிகளில் கொண்டாட்டங்களை  தவிர்க்க வேண்டும்" என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.