செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொண்டர்வு மனு - விசாரணை தொடங்கியது

 
high court

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவிரி மருத்துவமனைக்கு அவரை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக அமலாக்கத்துறை காவலில் வைத்திருப்பதா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். 

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடங்கியது. அப்போது, செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என கூறினார். வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.