44 மின்சார ரயில்கள் ரத்து - பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

 
bus bus

சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை விளங்கி வருகிறது. அவ்வபோது பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - தாம்பரம் மார்க்கத்தில் 44 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டது.

stalin

இந்த நிலையில், புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை - தாம்பரம் மார்க்கத்தில் 44 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகி வருகிறது.