காவிரி கரைபுரண்டோடும் வெள்ளம்... குடியிருப்புகளை சூழ்ந்த நீர்

 
காவிரி ஆற்றில் வெள்ளம் - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் காவிரி ஆற்றில் வெள்ளம் - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

பவானியில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாலக்கரை வீதி பகுதியில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.


மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து இன்று அதிகாலை வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆனது வெளியேற்றப்பட்டது இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதை அடுத்து ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பாலம் பகுதியில் உள்ள பாலக்கரை வீதி பகுதியில் சுமாராக பத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. ஏற்கனவே நீர்வளத்துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ளபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. 

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை இணைக்கும் பவானி பழைய காவேரி பாலம் ஆனது நூற்றாண்டுகள் பழமையானது என்பதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை வருவாய் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையே காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரானது 90 ஆயிரம் கன அடியில் இருந்து 75 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மதியத்திற்கு மேல் தண்ணீரானது வடிய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.