மீண்டும் கனமழை அலெர்ட்..!இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
Dec 16, 2025, 13:40 IST1765872601369
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருநெல்வேலி, தென்காசியில் இன்று (டிச.,16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழக தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


