கனமழை எதிரொலி- 4 ரயில்கள் ரத்து

 
train

சென்னையில் பெய்துவரும் கனமழை எதிரொலியால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

PT

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆரம்பத்திலேயே காற்றழுத்த தாழ்வு நிலையுடன் மிரட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.. மீனவர்கள் மீன்பிடிக்க 17ம் தேதி வரையில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் பகுதியில் மணிக்கு 55லிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

train

இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் கனமழை எதிரொலியாக சப்தகிரி, ஏற்காடு, திருப்பதி, காவிரி விரைவு ரயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரயில் நிலையம் இடையே தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.