சென்னையில் கனமழை- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

 
ச் ச்

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பாதிப்புகள் மற்றும் மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டறையில் ஆய்வு மேற்கொண்டார், மாநகராட்சி அதிகாரிகளிடம் மழை நீர் தேங்கிய இடங்கள் குறித்து கேட்டறிந்தார். மழை நீரை வெளியேற்றும் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் சுரங்க பாதைகள் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறும் விதம் குறித்து கேட்டறிந்தார்.  ழை பாதிப்பு தொடர்பாக வரும் புகார்கள் குறித்தும் மழைநீர் தேங்கிய இடங்கள் தொடர்பாகவும் உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்பு சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 37 உட்பட்ட எம்கேபி நகர், முல்லை நகர் ஆகிய பகுதியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் 

பின்பு சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 132 உட்பட்ட பராங்குசபுரம் பகுதியில் உள்ள மழைநீர் தேக்கத்தினை அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ந்த ஆய்வில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் கே என் நேரு, சட்டமன்ற உறுப்பினர் ஜே கருணாநிதி, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் கார்த்திகேயன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.