கனமழை; மீட்பு பணிகள் தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவமழையால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத 'நிலையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் 400 பேரிடர் மீட்பு படை குழு, 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தப் பின்னரே, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அணை நிலவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன வானிலை மையத்துடன் இணைந்து, அதற்கேற்றவாறு 'மழை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் . கடந்த மாதம் பெய்த மழையுடன் சேர்த்து, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 43% குறைவாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இந்த அளவு 17 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 19 சதவீத மழை பெய்திருக்கிறது. தகுந்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. தேவையான நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது என்றார்.