தமிழகத்தில் 5 நாட்களுக்குக் கனமழை தொடரும்!!

 
karur rain

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 

rain

கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர் ,பெரம்பலூர், கடலூர், சேலம் ,திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை டெல்டா மாவட்டங்கள் ,கடலூர் ,சேலம், ஈரோடு ,நீலகிரி ,அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,   ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

rain

வருகிற 6ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர் ,சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

வருகிற 7ஆம் தேதி கிருஷ்ணகிரி ,ஈரோடு ,சேலம் ,தருமபுரி ,திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை , விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

rain

8ம் தேதி டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை ,மதுரை ,விருதுநகர் ,தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்,  ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  இன்று முதல் 6ம் தேதி வரை கேரள கடலோர பகுதிகளில் லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் நாளை முதல் 7ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 8ம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.