நெல்லையை புரட்டிப்போட்ட கனமழை- ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து சேதம்

 
ச் ச்

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ட்


நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அம்பாசமுத்திரம், பாபநாசம், மானூர், வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினத்திலிருந்து கனமழை அதிகளவில் பெய்து வந்தது. இதனால் தாழ்வான ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையும் இருந்தது. இதைத்தொடர்ந்து பழைய நிலையிலான வீடுகள், கட்டடங்கள் மழையில் இடிந்து விழுந்தன. 


அந்த வகையில் நெல்லை டவுணில் 1 வீடு, பாளையங்கோட்டை 2 வீடு, மானூர் 2, சேரன்மாதேவி 6, அம்பாசமுத்திரம் 1, நாங்குநேரி 2, திசையன்விளை 1 என மொத்தம் 15 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த சம்பவங்களில் யாரும் காயமடைந்து பாதிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம், மானூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது அவைகளும் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.