திருப்பதியில் 3 கி.மீ. அளவில்லா கூட்டம்! தரிசனத்துக்கு 30 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையின் காரணமாக சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனைத்து அறைகளும் நிரம்பிய நிலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த வரிசையில் அக்டோபஸ் கமொண்டோ படை வீரர்கள் காம்பளக்ஸ் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதனால் எந்தவித டிக்கெட்டும் இல்லாமல் நேரடியாக சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 30 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும், இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


