மேல்மலையனூருக்கு படையெடுக்கும் பக்தர்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வதால், பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்து மதத்தில் அமாவாசை ஒரு முக்கியமான நாள். அமாவாசை அன்று முன்னோர்களை வணங்குவது வழக்கம். இந்த நாளில் பலரும் பித்ருக்களுக்கு பூஜை செய்வார்கள் அதேபோல ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசைகளைப் போல் ஆனி மாதத்தில் வரும் ஆஷாட அமாவாசையும் மிக முக்கியமான அமாவாசையாக கருதப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து ஏராளமான மேல்மலையனூர் பக்தர்கள் அரசு சிறப்பு பேருந்து மற்றும் கார்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்னையில் இருந்து மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.இதன் காரணமாக செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இருக்கின்றன சுங்கச்சாவடியை கடந்த செல்வதற்கு சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக காத்திருந்து செல்ல வேண்டிய சூழலானது ஏற்பட்டுள்ளது. சுங்க சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது வாகனங்களை கட்டணங்கள் எடுக்காமல் அனுப்பி வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


