கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

 
ச்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை; பெருங்களத்தூர், ஜிஎஸ்டி சாலைகளில் கடும் போக்குவரத்து  நெரிசல்!

நாளை விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள் என்பதால் தென் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சென்னையில் இருந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசிலானது ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் லட்ச கணக்கான மக்கள் தென்மாவட்டங்களை நோக்கி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில், உள்ளிட்ட பகுதிகளில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.  

ஸ்தம்பித்த சென்னை! ஆமைபோல் நகரும் வாகனங்கள்! GST சாலை, பெருங்களத்தூரில்  கடும் போக்குவரத்து நெரிசல் | Heavy traffic in Chennai including GST Road  and perungalathur due to ...

விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை காரணமாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து அரசு சார்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜிஎஸ்டி சாலையில் கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், என வானகங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.