நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு - சிக்கலில் பாஜக
Apr 18, 2024, 12:46 IST1713424585529
ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்ததாக அவரது உதவியாளர்களிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை காங்கிரஸ், பா.ஜ. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கின் விசாரணை முடிவில் நயினார் நாகேந்திரன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


