எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

 
svs

அவதூறு கருத்துக்களை கூறிவிட்டு, மன்னிப்பு கேட்டால் செய்த செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா? என்று எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

sv

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டார் .இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  இப்புகாரின் அடிப்படையில் எஸ்வி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

high court

அத்துடன் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யூடியூபில் எஸ்.வி. சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு,  சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.  இந்த சூழலில் இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எஸ்.வி சேகருக்கு எதிரான வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும்,  தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

sv

இந்நிலையில் எஸ்.வி .சேகர் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பின் மூலம் சரிகட்டி விட முடியாது என்றும் தனக்கு வந்த தகவலை பகிர்பவரே  அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பாவார் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.