சிவகாசி ரயில் நிலைய பெயர் பலகைகளில் இந்திக்கு முக்கியத்துவம்

 
சிவகாசி சிவகாசி

சிவகாசி ரயில் நிலையப் பெயர் பலகையில், தமிழை பின்னுக்கு தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Image


சிவகாசி ரயில் நிலையப் பெயர்ப் பலகையில் தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்து எழுதப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த செயல்பாட்டை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு வன்மையாகக் கண்டித்து தனது எக்ஸ்தள வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சிவகாசியிலுள்ள சமூக ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஒன்றிய பாஜக அரசுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்ததுடன் ஒன்றிய அரசின் மறைமுக ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு தமிழ்நாட்டினுள் ஹிந்தியை மறைமுகமாக   நுழைய விட மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளதாக உறுதிப்படக் கூறியுள்ளனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

இந்நிலையில் சிவகாசி ரயில் நிலையப் பெயர் பலகையில், தமிழை பின்னுக்கு தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும். தமிழே முன்னவள்! மூத்தவள்! முதன்மையானவள்! என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.