”அட்ஜெஸ்ட்” பண்ணலனா ”சஸ்பெண்ட்”... பெண்களை மிரட்டும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி
இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துறை மீது 20 பெண் அலுவலர்கள் கூட்டாக பாலியல் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை. இவர் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துறை மீது 20 பெண் அலுவலர்கள் கூட்டாக பாலியல் புகார் அளித்துள்ளனர். இவர் இந்த துறையில் இருக்கும் வரை பெண்களால் சுதந்திரமாக வேலை செய்ய முடியாது. கொடூர குணம் படைத்த செல்லத்துரையை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
செல்லத்துரை பேசும்போது முகம்சுழிக்கும் பெண் பணியாளர்கள் மிரட்டப்படுவதாகவும், சஸ்பெண்ட் செய்து விடுவேன் என மிரட்டப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் கூறியுள்ளனர். அரசு பணியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.