ரூ.50,000 வாடகை, ரூ.50,000 டெபாசிட்- விஜய் கூட்டம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி

 
ரூ.50,000 வாடகை, ரூ.50,000 டெபாசிட்- விஜய் கூட்டம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி ரூ.50,000 வாடகை, ரூ.50,000 டெபாசிட்- விஜய் கூட்டம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் வருகிற 18 ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வாடகையும், 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையும்  விதித்து இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது. 

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே 19 ஏக்கர் பரப்பளவில் தமிழக வெற்றிக்கழக  தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு வருகிற 18-ஆம் தேதி நடத்த அக்கட்சியின் நிர்வாககுழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையிலான தவெகவினர்  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம்அனுமதி கோரி விண்ணப்பம் அளித்திருந்தனர். இந்த நிலையில் மாநாடு நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் இந்து சமய அறநிலைத்துறையினரிடம்  அனுமதி வாங்க வேண்டும் என இந்து அறநிலைத்துறையினர்   தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்து அறநிலைத்துறை இடத்தை பயன்படுத்த 50 ஆயிரம் ரூபாய் வாடகையும் , டெபாசிட்டாக 50 ஆயிரம்  ரூபாயும் நிர்ணயித்து இடத்தை பயன்படுத்தி கொள்ள  அனுமதி அளித்துள்ளது.  மேலும், கோவில் நிலத்தை பயன்படுத்த 5 நிபந்தனைகளையும் இந்து சமய அறநிலைய துறை விதித்துள்ளது. இதனிடையே, பரப்புரை நடைபெறும் பகுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்கள் வந்து செல்லும் வழி ,   விஜய் பேசும் இடம் பாதுகாப்புக்கு செய்யப்பட்ட வசதிகள் ,  எத்தனை பேர் கூடுவார்கள் என்பதை குறித்த  மாவட்ட எஸ்பி சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில், மாநாட்டிற்காக வாய்மொழியாக காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை இடத்தை பயன்படுத்த அத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டதால், இடம் தொடர்பான சிக்கல் தீர்ந்துள்ளது.