“துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு போவது அவரின் விருப்பம்" - முதல்வர் ஸ்டாலின்

 
tn

சென்னை செனாய் நகரில் திமுக தகவல் நுட்ப அணி கூட்டம் இன்று நடந்தது.  இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.  அப்போது பேசிய அவர், "நாங்கள் சொல்ல முடியாதது சொல்ல தயங்குவதை நீங்கள் சொல்ல முடியும்.  என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள்.  அதிமுக - பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் நாம் மோதி கொண்டிருக்கிறோம். அதிமுகவும் , பாஜகவும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். பாஜகவுடன் இருந்தால் முற்றிலும் ஒழிக்கப்படுவோம் என்று பயந்து அதிமுக உள்ளே வெளியே ஆடுகிறது.

stalin

நம்முடைய செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும்.  பாஜகவை போன்று போலியாக இருக்க கூடாது.  ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.  கோயில்கள் இடித்து விட்டதாக பொய்யான படங்களை வெளியிட்டு பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர்.  யுனிவர்சிட்டி தான் திராவிட இயக்கத்தை ஒழிப்பதாக கூறியவர்கள் , கடைசியில் இங்கே தான் அடைக்கலமானவர்கள். திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது.

tn

தொடர்ந்து பேசிய அவர்,  "எனது மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு போவது அவரின் விருப்பம்.  தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா கோயிலுக்கும் தான் அவர் போயிட்டு இருக்காங்க . அது அவரின் தனிப்பட்ட விருப்பம்.  அதை நான் தடுக்கவில்லை; தடுக்க தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரியே  தவிர;  ஆன்மீகத்திற்கு அல்ல.  கோவிலும் ,  பக்தியும் அவரவர் விருப்பம் அவரவர் உரிமை" என்றார்.