மழை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலா?? - ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!

 
மழை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலா?? - ஆட்சியர் கடும் எச்சரிக்கை..! மழை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலா?? - ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!

 மழை நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிவரும் நிலையில், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து நேற்றைய தினமே பிரெட், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க குவிந்துவிட்டனர்.  இதன் காரணமாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.   போட்டிபொட்டுக்கொண்டு தேவையான பொருட்களை வாங்க  மக்கள் ஆர்வம் காட்டிய நிலையில் பொருட்களின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது.  

Image

 இந்நிலையில் மழை நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வுத் துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 15.10.2024 முதல் 17.10.2024 வரை கன மற்றும் மிக கனமழை பெய்ய உள்ளதாக முன்னெச்சரிக்கை வரப்பெற்றுள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பால் மற்றும் உணவு பொருட்களின் விலைகளை சரியான விலைகளில் விற்பனை செய்யுமாறும் மழை காலங்களில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பது மற்றும் விலையினை உயர்த்தி விற்பனை செய்வது கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.