பேருந்து டீசல் டேங்கில் ஓட்டை- ஆறாக ஓடிய 400 லிட்டர் டீசல்

 
ச்

விழுப்புரத்தில் சாலையில் ஓடிய ஆம்னி பேருந்தில் டீசல் டேங்க் ஓட்டை விழுந்து சாலையில் ஆறாக ஓடிய 400 லிட்டர் டீசலால் பெறப்பட்டது.

தஞ்சாவூரில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகில் வரும் போது திடீரென டீசல் டேங்க் உடைந்து கீழே இறக்கியது. அதிலிருந்து 400 லிட்டர் டீசல் ஆறாக ஓடியது. இதனை கண்ட சாலையில் பார்த்தவர்கள் பேருந்து ஓட்டுநரிடம் கூறியதை அடுத்து பேருந்து உடனடியாக நிறுத்திய ஓட்டுனர் பயணிகளை இறக்கி விட்டு விட்டார். 

சாலை முழுவதும் சாலையில் டீசல் வழிந்து ஓடிய நிலையிலுல் அச்சமின்றி வாகன ஓட்டிகள் இயல்பாகவே வாகனத்தை ஓட்டி சென்றனர். உடனடியாக தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் சாலை முழுவதும் பரவி கடந்த டீசல் மீது நுரையை தெளித்து முன்னெச்சரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சாலையில் ஓடிய பேருந்தில் திடீரென டீசல் டேங்க் உடைந்து சாலை முழுவதும் டீசல் ஆறாக ஓடியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.