இன்று 149 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று 8ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது . இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு , புதிய தங்கத்தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெறுகிறது .
இந்நிலையில் இன்று 8-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் தொடர்பான அறிவிப்பு இது வரை வெளியாகவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முக்கிய துறைகள் அனைத்தும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது . இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் 'மண்' (பிருத்வி) ஸ்தலமாக போற்றப்படுவது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில். சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில், கடந்த 17 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஆகம விதிகளின்படி திருப்பணிகள் நிறைவுற்றதை தொடர்ந்து, காலை 5.45 மணியளவில் இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த ஆன்மீக நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெறும் விழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டும், உள்ளூர் மக்கள் இவ்விழாவில் பங்கேற்கும் வகையிலும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 8 ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


