ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

இராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (ஏப்ரல் 4) ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் முதல் யாகசாலை தொடங்கியது இரண்டு நாள் இன்று யாகசாலை பூஜை விக்னேஷ்வரன் பூஜை கால பூஜை நடைபெற்ற வந்த நிலையில் இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருக்கோயில் வளாகம் மற்றும் கோயில் உட்புற பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் ஆகியோர்கள் ஆய்வு செய்தனர். கும்பாபிஷேகம் முடியும் வரை சந்தன காப்பு களையப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு மரகத நடராஜர் காட்சியளிப்பார். நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து ஏப்.,4 இரவு 7:00 மணி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஏப்.4ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு இரவு 8:00 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடப்பட்டு கம்பி கதவுகளுடன் நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்யும் பொருட்டு மே.10 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.