நாளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விடுமுறை

 
திருவண்ணாமலை திருவண்ணாமலை

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலையில் கடந்த 24- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான நாளை மறுதினம் (3 ஆம் தேதி) அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும் அதனை தொடர்ந்து கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர தீபமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 40 லட்சம் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் பாதுகாப்புக்காகவும், பெரும் கூட்டத்தை தவிர்க்கவும் நாளை மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.