முதலமைச்சரிடம் உதவி கேட்ட சிறுமிக்கு வீடு!!

 
tn

முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையம் சென்றபோது பொதுமக்களில் நின்றிருந்த 7 வயது சிறுமி திடீரென ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வையுங்கள் என்று சத்தம் போட்டார். சிறுமியின் குரல் முதலமைச்சரின் காதுகளுக்கு ஏற்றுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த இடத்தை கடந்து சென்று விட்டார் . இதனிடையே சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறுமியிடம் இது குறித்து விசாரித்தார்.  தனது குடும்பம் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியவில்லை என்றும் சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் உறுதி அளித்தார்.  நல்லூரில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமி காவியா திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர்.  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது தந்தை மாரடைப்பால் இறந்து விட்டார். தற்போது காவியா தனது தாய் கவிதா மற்றும் சகோதரர்கள் கவின்குமார் ஆகியருடன் கோவை சிங்காநல்லூரில் வசித்து வந்துள்ளார். தந்தை இறந்த பிறகு  குடும்பம் மிகவும் சிரமத்தில் இருப்பதால் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவித்து வருவதாக சிறுமி கண்ணீர் மல்க  கூறியுள்ளார்.

tn

இந்த சமயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு வருவதை அறிந்த காவியா குடும்பத்தினர் விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்துள்ளனர். அப்போது தான்  சிறுமி காவியா தன்னை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி சத்தம் போட்டு கோரிக்கை வைத்தது ஆட்சியர் காதில் விழுந்துள்ளது. 

tn

இந்நிலையில் சிறுமி காவியாவின் குடும்பத்திற்கு நடப்பாண்டு படிப்பு செலவுக்கு பணம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் . கவிதா கோவையில் சேர்ந்ததாலும் அவரது கணவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்என்பதால்,  அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனைக்கு சட்ட ரீதியான நடவடிக்கை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கவிதாவிற்கு கோவையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  உடனடியாக வீடு வழங்க தகுதியானவரா? என்று கோவை மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.