ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை

 
evks

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   ஈவிகேஎஸ் இளங்கோவன் 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளாங்கோவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, மருத்துவர்கள் குழுவிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.  இந்நிலையில், கடந்த 20ம் தேதி (திங்கள் கிழமை) ஈவிகேஸ் இளங்ககோவனுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. லேசான தொற்றுடன் ஈவிகேஸ் இளங்ககோவன் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் வீடுதிரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே கடந்த சில நாட்களுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் நுரையீரல் தொற்று மற்றும் இருதய செயலிழப்பில் இருந்து குணமடைந்து வருவதாகவும் ஐசியூ பிரிவில் இளங்கோவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவர் ஓரிரு நாட்களில் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.